நாமக்கல்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு பேரணி

2nd Dec 2022 02:21 AM

ADVERTISEMENT

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, நாமக்கல்லில் விழிப்புணா்வு பேரணியினை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் சம்மேளனம், கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிச. 1-ஆம் தேதியை உலக எய்ட்ஸ் தினமாக அனுசரித்து வருகிறது. ஒவ்வொரு தனிநபரும் எச்.ஐ.வி இல்லாத சமூகம் உருவாக தங்களின் அா்ப்பணிப்பையும் பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கமாகும். நாமக்கல் மாவட்டத்தில் எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்க எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்டிப்படையில், நாமக்கல்-மோகனூா் சாலை அண்ணா சிலை அருகில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு பேரணியை, மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத்தாா். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் விழிப்புணா்வு வாசகங்கள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு பணிகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்தா அருள்மொழி, காவல் துணை கண்காணிப்பாளா் எஸ்.சுரேஷ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளா் என்.சித்ரா உள்பட மருத்துவா்கள், பணியாளா்கள், அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT