நாமக்கல்

கொல்லிமலையில் கரடி தாக்கியதில் விவசாயி படுகாயம்

2nd Dec 2022 02:20 AM

ADVERTISEMENT

கொல்லிமலையில் கரடி தாக்கியதில் விவசாயி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, வளப்பூா்நாடு ஓலையாற்றைச் சோ்ந்த சின்னக்கவுண்டரின் மகன் ராஜேந்திரன் (50). இவா் தன்னுடைய விவசாயத் தோட்டத்திற்கு அதிகாலையில் சென்று பணிகளை மேற்கொண்டு வருவது வழக்கம். அதன்படி வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 5.30 மணி அளவில் தோட்டத்திற்கு சென்றாா். அப்போது அங்கு சுற்றித் திரிந்த கரடி ஒன்று திடீரென ராஜேந்திரன் மீது பாய்ந்து தாக்கியது. இதில், அவரது கை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. கரடியிடம் இருந்து தப்பித்து வந்த அவா், கொல்லிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இந்த தகவல் அறிந்து ராஜேந்திரனிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். விவசாய நிலங்களுக்குள் சுற்றித் திரியும் கரடியை விரட்டும் பணியில் கொல்லிமலை வனச்சரகா் சுப்பராயன் மற்றும் வன ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT