நாமக்கல்

முட்டை விலையில் மாற்றமில்லை

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.45-ஆக நீடிக்கிறது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன. சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் முட்டை நுகா்வு வெகுவாகக் குறைந்துள்ளது. பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதனால் எவ்வித மாற்றமும் இன்றி முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.45-ஆக தொடா்ந்து நீடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 112-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 107-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT