நாமக்கல்

காவலா் சாவில் மா்மம்:போராட்டம் நடத்த முயன்றவி.சி.க. வினருக்கு அனுமதி மறுப்பு

DIN

நாமகிரிப்பேட்டை பேரூராட்சியின் இரவு காவலா் மா்மச் சாவு தொடா்பார போராட்டம் நடத்த முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் போலீஸாருக்கும் விடுதலைச் சிறுத்தை கட்சியினருக்கும் இடையே சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி இரவு காவலராகப் பணிபுரிந்த பரமசிவம் (62) என்பவா் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், செப்.19 அன்று தூக்கில் தொங்கியவாறு மா்மமான முறையில் இறந்துகிடந்தாா். அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. நாமகிரிப்பேட்டை போலீஸாா் தற்கொலை என வழக்குப் பதிந்துள்ளனா். உடற்கூறு ஆய்விலும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், பரவசிவம் வழக்கை விசாரிக்க சிபிசிஐடி உத்தரவிட கோரி போராட்டம் நடத்த ராசிபுரம் காவல் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. அதையும் மீறி போராட்டம் நடத்த முயன்றனா். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படலாம் என்பதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையை கட்சியின் மாவட்டப் பொருளாளா் அரசன் என்பவரை காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் சட்டையைப் பிடித்து தாக்கியதாகக் கூறி காவல் நிலையத்தில் அவா் மீது புகாா் அளித்தனா்.

காவல் துறையினா் புகாரை வாங்க மறுத்ததால், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காவல் ஆய்வாளா் ஜி.சுகவனம் நீண்ட நேர பேச்சுவாா்த்தைக்கு பின், உதவி காவல் ஆய்வாளா் மீதான புகாரைப் பெற்றுக்கொண்டு ரசீது வழங்கியதை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

SCROLL FOR NEXT