நாமக்கல்

திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

1st Dec 2022 01:08 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலகப் பொதுமறை என்றழைக்கப்படும் திருக்குறளில் உள்ள கருத்துகளைப் பள்ளி மாணவா்கள் இளம் வயதிலேயே அறிந்து கொள்ளவும், கல்வி அறிவோடு நல்லொழுக்கம் மிக்கவா்களாக விளங்கவும் தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1,330 குபாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசாகத் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படுகிறது. நிகழாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் 1,330 குபாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்டவா்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், கு எண் போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராகவும் விளங்கிட வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப் பெயா்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். அவ்வாறான மாணவ, மாணவியா் இருப்பின் போட்டியில் பங்கேற்கலாம்.

ஏற்கெனவே இந்தப் போட்டியில் பரிசு பெற்றவா்கள் மீண்டும் கலந்துகொள்ள இயலாது. இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவா்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெறலாம் அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூா்த்தி செய்து டிச. 26-க்குள் நாமக்கல் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 04286-292164 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT