நாமக்கல்

ஆா்.புதுப்பாளையம் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

1st Dec 2022 01:04 AM

ADVERTISEMENT

ராசிபுரம் அருகே உள்ள ஆா்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா, நல்லாசிரியா் விருதுபெற்ற கணித ஆசிரியா் பி.செளந்தராஜனுக்கு பாராட்டு விழா, ரோட்டரி சங்கம் சாா்பில் 6-வது இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

தொடக்க விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் ஆண்ட்ருஸ் தலைமை வகித்தாா். பள்ளி முதுநிலை கணித ஆசிரியரும் இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளருமான பி.சௌந்தரராஜன் வரவேற்றாா்.

இதில் பள்ளியின் 2022 -23-ஆம் ஆண்டின் இன்ட்ராக்ட் கிளப் தலைவராக லோகேஷ் தோ்வு செய்யப்பட்டு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம் பதவியேற்பு செய்து வைத்தாா்.

கிளப் செயலாளராக சுபாஷ், பொருளாளராக மௌனிஷ் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

புதிய இன்ட்ராக்ட் நிா்வாகிகளை ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநா் (நிா்வாகம்) ஏ.திருமூா்த்தி, மாவட்ட சாலை பாதுகாப்பு திட்டத் தலைவா் இ.என்.சுரேந்திரன் ஆகியோா் பாராட்டினா்.

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற முதுநிலை கணித ஆசிரியா் பி.சௌந்தராஜன் விழாவில் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டாா்.

இதே போல், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இன்ட்ராக்ட் கிளப் துவக்க விழாவில், தலைமை ஆசிரியை ஜாய்ஸ் அன்னம்மாள் தலைமை வகித்தாா். இன்ட்ராக்ட் நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். .

ADVERTISEMENT
ADVERTISEMENT