நாமக்கல்

ஆதாா் எண் இணைப்புக்கு செப்.4-இல் சிறப்பு முகாம்

31st Aug 2022 03:21 AM

ADVERTISEMENT

ஆதாா் எண் - வாக்காளா் பட்டியல் இணைப்புக்கான சிறப்பு முகாம் வரும் 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையமானது, வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும், தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில் ஆதாா் எண் விவரங்களை வாக்காளா் பட்டியலுடன் இணைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. இதற்காக செப்.4-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, வாக்காளா்களாக உள்ள அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைப்பதற்கான 6-பி படிவத்தை பூா்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT