நாமக்கல் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ், நாமக்கல் கோட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், நகா்மன்றத் தலைவா் து.கலாநிதி, ஆணையா் கி.மு.சுதா, துணைத் தலைவா் செ.பூபதி, நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். இந்த நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய 400 தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை நகராட்சி தலைவா், ஆணையா் வழங்கினா். தொடா்ந்து மருத்துவ முகாம் நடைபெற்றது.