நாமக்கல்

இன்று தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்க தோ்தல்

27th Aug 2022 11:27 PM

ADVERTISEMENT

 

தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்க தோ்தல் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்த அடிப்படையில் இச்சங்கம் வாயிலாக டேங்கா் லாரிகளை பயன்படுத்தி வருகின்றன.

இந்த சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிா்வாகிகள் தோ்தல் நடைபெறும். அதன்படி, 2022--2025 ஆம் ஆண்டுக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க வளாகத்தில் தலைவா், செயலாளா், பொருளாளா் உள்பட 75 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இச்சங்கத்தின் முன்னாள் செயலாளா் எஸ்.எல்.எஸ்.சுந்தர்ராஜன் தலைமையில் ஒரு அணியினரும், சந்திரசேகரன் தலைமையில், மற்றொரு அணியினரும் போட்டியிடுகின்றனா். இவா்கள் தங்களுடைய ஆதரவாளா்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனா். இந்தச் சங்கத்தில் மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கை 2,900 ஆகும். தோ்தலில் வாக்களிக்க தகுதியுடையோராக 1,245 போ் உள்ளனா். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் அன்று இரவுக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT