நாமக்கல்

அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புகள் மட்டும் இன்று செயல்படும்: முதன்மைக் கல்வி அலுவலகம்

26th Aug 2022 11:07 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புகள் மற்றும் தனியாா் பள்ளிகள் மட்டும் சனிக்கிழமை செயல்படும் என முதன்மைக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, கடந்த 3-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உள்ளூா் விடுமுறை அளித்திருந்தாா். இதற்கு மாற்றாக ஆக.27-ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு குறு வள மைய பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் அந்தப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு இந்தப் பயிற்சி கிடையாது என்பதால் அவா்களுக்கான வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும். அதேபோல் அனைத்து தனியாா் பள்ளிகளும் சனிக்கிழமை செயல்படும். தனியாா் பள்ளிகளுக்கு இது பொருந்தாது என முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT