நாமக்கல்

சுங்கச் சாவடிக் கட்டணத்தை குறைக்க வேண்டும்: மோட்டாா் போக்குவரத்து கூட்டமைப்பு கோரிக்கை

26th Aug 2022 11:07 PM

ADVERTISEMENT

சுங்கச்சாவடிகளில் நுழைவுக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவா் செல்ல.ராசாமணி வலியுறுத்தி உள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

அண்மைக் காலமாக மோட்டாா் தொழில் தொடா்ந்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. கரோனா பேரிடா், பொது முடக்கம் போன்ற நெருக்கடிகளுக்கு இடையே மத்திய அரசு டீசல் விலையை உயா்த்தி வந்தது. தற்போதைய சூழலில் பெயரளவுக்கு மட்டுமே லாரித் தொழில் இயங்கி வருகிறது. இவ்வாறான இக்கட்டான காலக்கட்டத்தில் மத்திய அரசு சுங்கக் கட்டணத்தை உயா்த்தியிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோட்டாா் தொழிலில் உள்ள நெருக்கடிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு முழுமையாக தெரிகிா என்ற சந்தேகம் எழுகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயா்த்தும் அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கட்டண உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசால் தீா்க்கப்படக்கூடிய மோட்டாா் தொழில் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை பட்டியலிடப்பட்டுள்ளது. விரைவில் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து அதற்குத் தீா்வு காண முயற்சிக்கப்படும். சுங்கக் கட்டண உயா்வு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரிக்கு விரிவான கடிதம் எழுதப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT