நாமக்கல்

பாண்டமங்கலத்தில் 45 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

22nd Aug 2022 02:54 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1976 -77-ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் எஸ்.எஸ். எல்.சி பயின்ற முன்னாள் மாணவா்கள் 45 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவா் சந்தித்து தங்களது பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவரும், பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவருமான, மருத்துவா் சோமசேகா் விழாவிற்கு தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் தங்கவேலு அனைவரையும் வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் ரங்கசாமி, பேரூராட்சித் துணைத் தலைவா் முருகவேல், கிராமக் கல்விக் குழு தலைவா் கருணாநிதி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மகாமுனி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

அதனை தொடா்ந்து முன்னாள் மாணவா்கள் மற்றும் முன்னாள் ஆசிரியா்களுக்கு தற்போது அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பொன்னாடை அணிவித்து கொளரவித்தனா். மேலும் 2021-22-ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவா்கள், தங்களுக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

முன்னதாக முன்னாள் மாணவா்கள் ஒருவரை ஒருவா் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். பள்ளியில் உள்ள கலையரங்கத்தை முன்னாள் மாணவா்கள் சாா்பில் ரூ. 2.50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து அதற்கான திறப்பு விழாவும் நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT