நாமக்கல்

நாமக்கல்லில் குழாய் உடைந்து வீணாகிச் சென்ற காவிரி குடிநீா்

22nd Aug 2022 02:58 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் குழாய் உடைந்து காவிரி குடிநீா் சாலையில் ஆறாக ஓடியது.

நாமக்கல்-மோகனூா் சாலை தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் குடிநீா் குழாய் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் சரிபாா்ப்புப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழாயில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.50 மணியளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் காவிரி குடிநீா் நீரூற்று போல் பொங்கி சாலையில் ஆறாக ஓடியது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நாமக்கல் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனா். அங்கு வந்த ஊழியா்கள் காவிரி நீா் வீணாகி செல்வதைத் தடுத்து நிறுத்தி சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT