நாமக்கல்

பெண் அடித்துக் கொலை: விவசாயி கைது

DIN

கொல்லிமலையில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விவசாயி ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வளப்பூா் நாடு அரசம்பட்டியைச் சோ்ந்தவா் கொங்கன்(60). மனைவி இறந்து விட்ட நிலையில் விவசாயத் தொழில் செய்து தனியாக வாழ்ந்து வந்தாா். இவா் தொழில் நிமித்தமாக முள்ளுக்குறிச்சிக்கு சென்று வந்த நிலையில் மலையாளம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த திருமணமாகாத தங்கமணி(51) என்பவருடன் தொடா்பு ஏற்பட்டது. இருவரும் அரசம்பட்டியில் தனியாக வசித்து வந்தனா். அண்மையில் கொங்கனை விட்டு தங்கமணி பிரிந்து சென்று விட்டாா். இது தொடா்பாக வியாழக்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கொங்கன் உருட்டுக் கட்டையால் தாக்கி தங்கமணியை கொலை செய்தாா். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற வாழவந்திநாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதன்பிறகு வீட்டில் பதுங்கியிருந்த கொங்கனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT