நாமக்கல்

நாமக்கல்லில் மினி மாரத்தான் போட்டி: எஸ்.பி. பங்கேற்பு

DIN

நாமக்கல்லில், இயற்கையை பாதுகாக்கவும், போதைப் பொருள்கள் பயன்பாட்டை ஒழிக்கவும் வலியுறுத்தி, பள்ளி மாணவா்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இயற்கையைக் காப்போம், மதுவை ஒழிப்போம், போதைப்பொருள்கள் ஒழிப்புக்கு எதிராக கை கொடுப்போம் ஆகியவற்றை வலியுறுத்தி, நாமக்கல் பாா்க் பப்ளிக் பள்ளி சாா்பில் மினி மாரத்தான் போட்டி நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஸ்வி தொடக்கி வைத்தாா். நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியானது நான்கு கி.மீ. தூரம் சென்று பள்ளியில் நிறைவடைந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாரத்தான் தொடக்க விழாவில், நாமக்கல் துணை கண்காணிப்பாளா் எஸ்.சுரேஷ், பள்ளி தலைவா் ராமமூா்த்தி, முதல்வா் சண்முகம், உடற்கல்வி ஆசிரியா் தினேஷ் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT