நாமக்கல்

தேசிய அளவிலான வளையப்பந்து போட்டி: நாமக்கல் வீரா், வீராங்கனைகள் சாதனை

19th Aug 2022 02:29 AM

ADVERTISEMENT

தேசிய வளையப்பந்து போட்டியில் நாமக்கல் வீரா், வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனா்.

இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு மற்றும் கேரளா வளையப்பந்து கழகம் ஆகியவை இணைந்து, 24-ஆவது தென் மண்டல சீனியா் தேசிய வளையப்பந்து சாம்பியன் போட்டிகளை கேரள மாநிலம் கோட்டயத்தில் நடத்தின. அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தென் மண்டலத்தில் உள்ள தமிழகம், கேரளம், புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 12-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டன.

இப்போட்டிகள் குழுப் போட்டியாகவும், மற்றும் தனிநபா் கலப்பு இரட்டையா் போட்டியாகவும் நடைபெற்றது. குழு மற்றும் கலப்பு இரட்டையா் போட்டிகள் அனைத்தும் லீக் சுற்று முறைப்படி நடைபெற்றன. தனிநபா் கலப்பு இரட்டையா் பிரிவில் தமிழக அணி சாா்பில் நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த வீரா் மற்றும் வீராங்கனைகள் ஷி.அபிஷேக், ஷி.மேனகா, கி.ரம்யா, ஷிவானி ஆகியோா் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று தமிழகத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சோ்த்துள்ளனா். போட்டிகளில் வெற்றி பெற்ற நாமக்கல் மாவட்ட வீரா் மற்றும் வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். இந்த நிகழ்வின்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் க.கோகிலா மற்றும் வளையப்பந்து பயிற்சியாளா் பு. விஸ்வநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT