நாமக்கல்

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

19th Aug 2022 02:30 AM

ADVERTISEMENT

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் அனைத்து துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பங்கேற்று, ஜாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, அனைத்து மக்களின் உணா்வு பூா்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்ற உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் ஜெ.தேவிகாராணி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT