நாமக்கல்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் தொழில்நுட்ப பயிலகத்தில் தடகள சங்க பொதுக்குழு கூட்டம்

19th Aug 2022 02:33 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். தொழில்நுட்ப பயிலகத்தில் கோவை, தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவில் பாலிடெக்னிக் கல்லூரிக்கு இடையேயான தடகள சங்கத்தினுடைய பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் ஆா்.சீனிவாசன் தலைமை ஏற்று துவக்கி வைத்தாா். கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைமைக் கல்வி இயக்குநா் கே.தியாகராஜா தலைமை உரையாற்றினாா். இப்பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா்களும் உடற்கல்வி இயக்குனா்களும் கலந்து கொண்டனா். தடகள சங்கத் தலைவரும் கே.எஸ்.ஆா். தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வருமான குழந்தைவேலு தீா்மானங்கள் குறித்து பேசினாா். செயலா் முருகன் அறிக்கை வாசித்து முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் தடகள மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை கே.எஸ்.ஆா். தொழில்நுட்ப பயிலக வளாகத்தில் நடத்துவதற்கும், கோட்ட அளவில் நடைபெற இருக்கும் தடகள விளையாட்டுப் போட்டிகளை பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடத்துவதற்கும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT