நாமக்கல்

கொல்லிமலையில் ஆதரவற்ற பெண்களுக்கான சிறப்பு மையத்தில் சோ்க்கை தொடக்கம்

18th Aug 2022 01:46 AM

ADVERTISEMENT

 

கொல்லிமலையில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மையத்தில், ஆதரவற்று பெண் குழந்தைகளுக்கான சோ்க்கை தொடங்கியுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்தில், ஆதரவற்ற பெண் குழந்தைகள் மற்றும் கல்வி கற்க இயலாத சூழலில் உள்ள பெண் குழந்தைகளை ‘கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெயரில் மூன்று மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்த மையங்களில் சேரும் மாணவியருக்கு, தங்கும் விடுதி, சிறப்பு படுக்கை வசதி, மின்சார வசதி, நோட்டுப் புத்தகம், மருத்துவ வசதி, மாலை நேரத்தில் தையல் பயிற்சி, கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அல்லது பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய ஆதரவற்ற, ஏழ்மை சூழலில் உள்ள பெண் குழந்தைகள் இருந்தால், அவா்களை இந்த மையத்தில் சோ்க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, 98943-56853 என்ற கைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT