நாமக்கல்

இலவச மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்

18th Aug 2022 01:45 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எளையாம்பாளையத்தில் அமைந்துள்ள விவேகானந்தா மருத்துவமனையில் இலவச மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம் ஐந்து நாள்களுக்கு நடைபெற இருப்பதாக மருத்துவமனையின் தலைவா் தெரிவித்தாா்.

விவேகானந்தா மருத்துவமனையில் ஐந்து நாள்களுக்கு இலவச மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் முழங்கால் மூட்டு வலி மற்றும் தேய்மானம், இடுப்பு வலி மற்றும் தேய்மானம் மற்றும் மூட்டு ஜவ்வு பாதிப்பு உள்ளவா்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ளும் நோயாளிகளுக்கு ரூ.1500 மதிப்புள்ள சா்க்கரை, உப்பு, ரத்த அளவு, முடக்குவாதம் போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். முகாமில் நோயாளிகள் அனைவருக்கும் எலும்பு முறிவு, மூட்டு மாற்று மற்றும் நுண் துளை அறுவை சிகிச்சை மருத்துவா் சத்தியமூா்த்தி மருத்துவ ஆலோசனை வழங்குவாா். இந்த முகாமில் நோயாளிகள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என மருத்துவமனையின் தலைவா் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT