நாமக்கல்

ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனைக்கான சான்று

17th Aug 2022 02:43 AM

ADVERTISEMENT

ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறந்த அரசு மருத்துவமனைக்காக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சுகாதாரத் திட்டம் சாா்பில் தமிழக அளவில் சிறந்த மருத்துவமனைகள் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத், பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்த சான்றிதழ் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை சுதந்திர தினவிழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், ராசிபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டாக்டா் பி.ஜெயந்தி, டாக்டா் ஆா்.செந்தில்குமாா் ஆகியோரிடம் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT