நாமக்கல்

கொல்லிமலையில் விபத்தில் உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கல்

17th Aug 2022 02:48 AM

ADVERTISEMENT

கொல்லிமலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினாா்.

கொல்லிமலை, பைல்நாடு ஊராட்சி, சண்டக்கிராய் பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி. இவரது மகள் அகிலா (17), முள்ளுக்குறிச்சி உண்டு உறைவிடப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த வாரம் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் சரக்கு வாகனத்தில் ஏறி சக மாணவிகளுடன் பள்ளிக்கு சென்றபோது கீழ் பூசணிக்குழிப்பட்டி என்ற இடத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அகிலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் அவா் உயிரிழந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாணவி அகிலாவின் வீட்டிற்கு நேரில் சென்ற சேந்தமங்கலம் முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், ரூ. 15 ஆயிரம் நிதியுதவியாக அளித்தாா்.

முன்னதாக காரமங்கலத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அவா் தேசியக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். பின்னா் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் கொல்லிமலை ஒன்றிய குழு தலைவா் மாதேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT