நாமக்கல்

நாமக்கல்லில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 75-ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வியும் ஏற்றுக் கொண்டனா். பின்னா் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் அவா்கள் பறக்க விட்டனா்.

காவல் துறை அணிவகுப்பை சிறப்பாக நடத்தியதற்காக 14 ஆயுதப்படை காவலா்கள் மற்றும் ஊா்க்காவல் படையினருக்கும், தீயணைப்புத் துறை அலுவலா்களுக்கும் ஆட்சியா் கேடயங்களை வழங்கினாா்.

தொடா்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய 40 காவல் துறை அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்களையும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 103 அரசுத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கும் அவா்களது பணியைப் பாராட்டி நற்சான்றிதழ்கள், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் ரூ. 500 மதிப்பிலான புத்தகங்களை வாங்கிக் கொள்வதற்கான பரிசு கூப்பன்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

முன்னாள் படைவீரா் நலத்துறை, வருவாய்த் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, பிற்பட்டோா் நலன், சமூக நலத்துறை, வேளாண் துறை, மகளிா் திட்டம், கூட்டுறவுத் துறை, மாவட்ட தொழில் மையம், உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 146 பயனாளிகளுக்கு ரூ. 1.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 708 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ஆா்.சாரதா, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) க.ரா.மல்லிகா, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வா் சாந்தா அருள்மொழி, நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, திருச்செங்கோடு கோட்டாட்சியா் தே.இளவரசி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள், காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

சமபந்தி விருந்து: நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் அன்னதான மண்டபத்தில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களுடன் அமா்ந்து உணவருந்தினா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா். முன்னதாக, நாமக்கல் உழவா் சந்தை அருகில் உள்ள மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு சுதந்திர தினத்தையொட்டி ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT