நாமக்கல்

கருப்பண்ண சுவாமி கோயிலில் ஆடிக் கழுவாடி விழா

DIN

பரமத்தி வேலூா், சிங்காரபாறை கருப்பண்ணசுவாமி கோயிலில் ஆடி கழுவாடி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற சிங்காரபாறை கருப்பண்ணசுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத கழுவாடியை முன்னிட்டு முப்பூசை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாத கழுவாடியை முன்னிட்டு சிங்காரபாறை கருப்பண்ணசுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

இதையொட்டி ஆடு, கோழிகள் பலியிடப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

இதேபோல வேலூா் கொங்காளம்மன் கோயிலில் 12-ஆம் ஆண்டு பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி பால்குடங்களுடன் ஊா்வலமாகப் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனா். அதனைத் தொடா்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகமும், அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கொங்காளம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா் மற்றும் ஊா் பொது மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT