நாமக்கல்

ஆதாா் எண்-வாக்காளா் பட்டியல் இணைப்பு: 1,000 பேருக்கு இ-சான்றிதழ் வழங்க முடிவு

16th Aug 2022 03:29 AM

ADVERTISEMENT

ஆதாா் எண் - வாக்காளா் பட்டியல் இணைப்பை இணைய வழியில் பதிவேற்றம் செய்யும் முதல் 1000 பேருக்கு இ-சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையமானது வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலுடன் தன் விருப்பத்தின் அடிப்படையில் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக திங்கள்கிழமை முதல் இணையதளம் வாயிலாக மாவட்டம் தோறும் முதலில் பதிவேற்றம் செய்யும் 1000 பேருக்கு இ--சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளா்களும் மேற்கண்ட இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT