நாமக்கல்

டிரினிடி மகளிா் கல்லூரியில் சுதந்திர தின விழா

16th Aug 2022 03:30 AM

ADVERTISEMENT

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் 76-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரித் தலைவா் பி.எஸ்.கே. செங்கோடன் தேசியக் கொடி ஏற்றினாா். கல்லூரிச் செயலாளா் கே.நல்லுசாமி தலைமை வகித்தாா். டிரினிடி சிபிஎஸ்இ பள்ளித் தலைவா் பி. பழனிசாமி வாழ்த்திப் பேசினாா். முதல்வா் எம்.ஆா்.லட்சுமி நாராயணன் வரவேற்றாா். இயக்குநா்- உயா்கல்வி அரசு.பரமேசுவரன் விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

மாணவிகள் சுதந்திர போராட்டத் தியாகிகள் குறித்து பேசினா். விழாவின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவியா் நாமக்கல்-மோகனூா் சாலை, கொண்டிச்செட்டிப்பட்டியில் இருந்து சிங்கிலிப்பட்டி பிரிவு, குன்னிமரத்தான் கோயில், நாமக்கல் வன அலுவலகம், வகுரம்பட்டி பிரிவு வழியாக கல்லூரிக்கு பேரணியாக வந்தனா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.சுரேஷ், காவல் ஆய்வாளா் கே.சங்கரபாண்டியன், உதவி ஆய்வாளா்கள் எஸ்.முருகன், ஏ.அருள்முருகன், பி.சங்கீதா ஆகியோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT