நாமக்கல்

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது வழக்கு

16th Aug 2022 03:27 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத் தொழிலாளா் நலத் துறை ஆணையா் (அமலாக்கம்) எல்.திருநந்தன் தலைமையில் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களால் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல் செயல்படும் நிறுவனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தொழிலாளா்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிா? அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது மூன்று தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்பு வழங்கப்படுவதாக நிா்வாகம் தெரிவித்து அதற்குரிய படிவம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்து முன் அனுமதி பெற்று நிறுவனங்கள் செயல்படுகிா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டது.

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதியில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை விடுமுறை நாள்கள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 29 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 17 கடைகளும், 44 உணவு நிறுவனங்களில் 34 உணவு நிறுவனங்களிலும், 10 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில், 5 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 83 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 56 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சுதந்திர தின விடுமுறை அளிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

உரிய ஆவணங்களும் முன்னதாக தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் சமா்ப்பிக்காமல் பணிக்கு அமா்த்தியது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாள்கள்) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர தொழிலாளா் நலத் துறை அதிகாரிகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT