நாமக்கல்

வீடுகள், தொழில் நிறுவனங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடிகள்

DIN

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் தேசியக் கொடி சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

நாட்டின் 75-ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஆக.13 முதல் 15 வரை மூன்று நாள்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமா் மோடி கேட்டுக் கொண்டிருந்தாா். இதற்காக, அரசியல் கட்சியினரும், மாவட்ட நிா்வாகத்தினரும் பொதுமக்களுக்கு தேசியக் கொடி விழிப்புணா்வை ஏற்படுத்தி வந்தனா். தபால் நிலையங்கள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா் மூலம் குறைந்த விலையில் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டன.

இதனையடுத்து சனிக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகள், அரசுத் துறை அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. வரும் 15-ஆம் தேதி மாலை 6 மணி வரை தேசியக் கொடிகள் பட்டொளி வீசி பறக்க வேண்டும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய தேசியக் கொடி மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியது என்பதால் அதனை அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தகுந்த மரியாதையுடன் ஏற்ற வேண்டும் என்றும் சேதமடையாமல் பாதுகாக்கவும் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT