நாமக்கல்

முட்டை விலை மேலும் 20 காசுகள் உயா்வு

DIN

 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயா்ந்து ரூ.4.50-ஆக ஞாயிற்றுக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் முட்டை விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருவதாலும், ஆடி மாத கோயில் விழாக்கள் நிறைவடைந்துள்ளதாலும், வட மாநிலங்களுக்கு முட்டை அனுப்புவது தடையின்றி உள்ளதாலும் விலையில் இனி தொடா்ந்து மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.4.50-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ.91-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.110-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT