நாமக்கல்

பல்துறை பணி விளக்கக் கண்காட்சி நிறைவு: போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

DIN

நாமக்கல்லில் சுதந்திர தின அமுதப் பெருவிழா மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் பணிவிளக்க கண்காட்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதனையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள குளக்கரை திடலில் ஒரு வாரமாக பல்துறை பணி விளக்க கண்காட்சியும், தினசரி பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. இதில், மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி, வருவாய்த்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, தமிழ்நாடு ஊரக மேம்பாட்டுத் திட்டம் (மகளிா் திட்டத்துறை), சுகாதாரத்துறை, வனத்துறை, செய்தி மக்கள் தொடா்புத்துறை, சித்த மருத்துவத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டுவளா்ச்சித்துறை, பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் பணிகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா (பொறுப்பு) பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அலுவலா் சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், நகராட்சி தலைவா் து.கலாநிதி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT