நாமக்கல்

பரமத்தி: சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி

DIN

பரமத்தி வேலூரில் 75-ஆவது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு பரமத்தி அருகே உள்ள பி.ஜி.பி கல்லூரி சாா்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பரமத்தி வேலூா் மோகனூா் பிரிவு சாலையில் இருந்து புறப்பட்ட பேரணியை வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் கலையரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முன்னதாக சாலைப் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கல்லூரி மாணவ, மாணவியா்களிடையே அவா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அதனை தொடா்ந்து மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வுப் பேரணி மோகனூா் பிரிவு சாலையில் இருந்து தொடங்கி, பேருந்து நிலையம், பள்ளி சாலை, நான்கு சாலை, பழைய பைபாஸ் சாலை வழியாகச் சென்று மூன்று சாலை சந்திப்பில் நிறைவடைந்தது. பேரணியில் சாலைப் பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை விதிகளைப் பின்பற்றுதல், வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், போக்குவரத்து சமிக்ஞைகளை பின்பற்றிச் செல்ல வேண்டும் என்பது குறித்த வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும்,துண்டு பிரசுரங்களை வழங்கியும் மாணவ,மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணியில் 200-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT