நாமக்கல்

322 கிராம ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்ற தலைவா்களுக்கு மட்டுமே அனுமதி: ஆட்சியா்

14th Aug 2022 11:49 PM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில், 322 ஊராட்சிகளிலும் தலைவா்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற வேண்டும்; சாதிய பாகுபாடுகள் இருக்கக் கூடாது என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அறிவுறுத்தி உள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திரத் தின விழாவைக் கொண்டாடும் வகையிலும், தியாகிகளைப் போற்றும் வகையிலும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஆகியோா் மட்டுமே தேசியக் கொடிகளை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும். அவா்களுக்கு பதிலாக வேறு எவரேனும் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள ஊராட்சித் தலைவா்கள், தேசியக் கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினா் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றுவது தொடா்பாக பிரச்னைகள் இருந்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 அல்லது ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் கைபேசி எண் 74026-06854 ஆகியவற்றில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT