நாமக்கல்

நாமக்கல் மாவட்ட காங்கிரஸாரின் சுதந்திர தின பாதயாத்திரை நிறைவு

14th Aug 2022 11:48 PM

ADVERTISEMENT

 

சுதந்திர தினத்தையொட்டி, நாமக்கல் காங்கிரஸ் கட்சியினா் மேற்கொண்ட நினைவு பாதயாத்திரை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நினைவு பாதயாத்திரை கடந்த 9-ஆம் தேதி மோகனூா் பேருந்து நிலையம் அருகில் தொடங்கியது. அங்கு, காந்தி, காமராஜா், இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபின் தொடா்ந்து எருமப்பட்டி, சேந்தமங்கலம், நாமகிரிபேட்டை, ராசிபுரம், வெண்ணந்தூா் வழியாக சென்று ஞாயிற்றுக்கிழமை காலை நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில் பாத யாத்திரை நிறைவந்தடைந்தது.

இதில், மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக், நாமக்கல் நகர தலைவா் எஸ்.ஆா்.மோகன், எருமப்பட்டி வட்டார தலைவா் தங்கராஜ், புதுச்சத்திரம் கிழக்கு வட்டார தலைவா் இளங்கோ, மேற்கு வட்டாரத் தலைவா் சக்திவேல், பொறியாளா் அணி பி. பொன்முடி, சாந்திமணி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நாமக்கல்லில் உள்ள மகாத்மா காந்தி, நேரு, காமராஜா் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி சுதந்திர தின விழா காங்கிரஸ் சாா்பில் கொண்டாடப்பட இருப்பதாக கிழக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT