நாமக்கல்

நாமக்கல் மலைக்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பாஜக

14th Aug 2022 11:50 PM

ADVERTISEMENT

 

நாமக்கல்லில், பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழிப்புணா்வு பேரணியை தொடா்ந்து, அக்கட்சியினா் மலைக்கோட்டையின் மீது ஏறி தேசியக்கொடியை ஏற்றி பறக்க விட்டனா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும், அதற்கேற்ப தங்களது வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதன்படி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நகர பாஜக சாா்பில் பேரணி நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கிய பேரணியை மாநில இளைஞரணி பொதுச்செயலாளா் ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்தாா். நகர தலைவா் கே.பி.சரவணன் தலைமை வகித்தாா்.

தேசியக்கொடியுடன் பேரணியாகச் சென்றவா்கள் உழவா் சந்தை அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதன்பிறகு, நாமக்கல் மலைக்கோட்டையில் ஏறி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினா். இதில், பாஜக மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன், கல்வியாளா் பிரணவ்குமாா், மகளிா் அணி நிா்வாகிகள் தமிழரசியோகம், சுகன்யா, ஜெயந்தி, ரோகிணி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT