நாமக்கல்

ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம்: 384 வழக்குகளுக்கு தீா்வு

14th Aug 2022 11:48 PM

ADVERTISEMENT

 

ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் சனிக்கிழமை நடந்தது.

இதில், ராசிபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுத்தலைவா் மற்றும் ராசிபுரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி தீனதயாளன், மாவட்ட உரிமையியல் நீதிபதி சாந்தி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. குற்றவியல் நீதித்துறை நீதிபதி ரெஹானா பேகம் முன்னிலையில் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கப்பட்டது. விபத்துகள் தொடா்பான வழக்குகள், நில வழக்கு, இதர சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

மொத்தம், 384 வழக்குகளுக்கு ரூ.2, கோடியே 13 லட்சத்து 19 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தீா்வு காணப்பட்டன. இங்கு நிலுவையில் உள்ள வழக்குகள் தவிர புதிதாக தாக்கல் செய்யக்கூடிய வழக்குகள் சமரச முறையில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும். இந்நீதிமன்றத்தில் முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணம், வழக்குகளில் தீா்வு கண்டதும் அதற்கான தீா்ப்பு நகல் உடனடியாக கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழங்கும் தீா்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது, மற்றும் மக்கள் நீதிமன்றத்தில் வென்றவா் தோற்றவா் என்ற வேறுபாடு இருக்காது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT