நாமக்கல்

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்பு: நாமக்கல் மாணவருக்கு பாராட்டு

DIN

மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற நாமக்கல் அரசுப் பள்ளி மாணவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

44-ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி அண்மையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் அளவிலும், ஒன்றிய, மாவட்ட அளவிலும் செஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாவட்டத்தில் 4 போ் வீதம் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்று அங்குள்ள பல்வேறு நாட்டு வீரா்களுடன் விளையாடியும், கலந்துரையாடியும் வந்தனா்.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் செஸ் போட்டியில் முதலாவதாக இடம் பிடித்த நாமக்கல் செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் சந்தோஷ் மாமல்லபுரம் சென்று வந்தாா். அவரது திறமையைப் பாராட்டும் வகையில் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியா் ராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாணவா் சந்தோஷ் மற்றும் அவரது பெற்றோா் ரவிக்குமாா், ஜெயந்தி, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் மாதேஸ்வரன், துணைத் தலைவா் முத்துராஜா, பயிற்சியாளா் நாதன், செஸ் அகாதெமி பயிற்சியாளா் சிவராமகிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், ஆசிரியா் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியில், மாணவா் சந்தோஷ் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பரிசுகளின் தொகுப்புகள் பள்ளியில் அடுக்கி வைக்கப்பட்டு, ஊக்கமளிக்கும் வகையில் மற்ற மாணவ மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT