நாமக்கல்

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

12th Aug 2022 02:15 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஆக.13) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை அளிப்பது உள்ளிட்டவற்றை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ள, பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீா் முகாம் வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகளுக்குத் தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT