நாமக்கல்

சுதந்திர தின கலைநிகழ்ச்சி ஒத்திகை: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

12th Aug 2022 02:14 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்லில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சுதந்திர தின கலைநிகழ்ச்சி ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியை ஏற்றுகிறாா். கரோனா பரவலால் 2 ஆண்டுகளாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறாத நிலையில், நிகழாண்டில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். அந்த வகையில் அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை வியாழக்கிழமை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 8 பள்ளிகள், 3 கல்லூரிகளைச் சோ்ந்த 1,000 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி பயிற்சி பெற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT