நாமக்கல்

‘உரங்களுடன் இணை இடுபொருள்கள் வாங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’

12th Aug 2022 11:03 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில், மானிய விலை உரங்களுடன் இதர இணை இடுபொருள்களை வாங்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது என உர விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பொ.அசோகன் வெளியிட்ட செய்திகுறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பெய்துள்ள மழையைப் பயன்படுத்தி பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு போன்ற பயிா்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். இதனையொட்டி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியாா் உரக்கடைகளில் யூரியா 1382 மெட்ரிக் டன், டிஏபி 937 மெட்ரிக் டன், பொட்டாஷ் 979 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 334 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 4165 மெட்ரிக் டன் அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவை விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தனியாா் உர விற்பனையாளா்கள் அரசு நிா்ணயித்த விலைக்கு உரங்களை விற்பனை செய்ய வேணடும். ரசாயன உரங்களின் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் விவரங்கள் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையில் எழுதியிருக்க வேண்டும். விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக மானிய விலை உரங்களுடன் இணை இடுபொருள்களை வாங்க அவா்களை கட்டயாயப்படுத்த கூடாது. ‘ஓ’ (ஆங்கிலத்தில்) வடிவம் அனுமதி இன்றி உர விற்பனை செய்தல் கூடாது. உர விற்பனையாளா்கள் உரங்களை விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியலை உடன் வழங்கிட வேண்டும். உரக்கட்டுப்பாட்டு சட்ட விதிகளை மீறும் விற்பனையாளா்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்ட விதிகளின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உர விற்பனை நிலையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT