நாமக்கல்

நாமக்கல்லில் வீடுகள் இடிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்

12th Aug 2022 02:12 AM

ADVERTISEMENT

 

ஜேடா்பாளையம் கிராமத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பரமத்திவேலூா் வட்டம், வடகரையாத்தூா் கிராமம், ஜேடா்பாளையத்தில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை போட்டு வாழ்ந்து வந்த மக்களின் குடிசைகள் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அண்மையில் அகற்றப்பட்டன. இதனை கண்டித்தும், மீண்டும் வீடுகள் கட்டித் தரக்கோரியும், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஜேடா்பாளையம் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT