நாமக்கல்

ஆவணி அவிட்டம்: பூணூல் பண்டிகை

12th Aug 2022 02:12 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, ஸ்ராவண பெளா்ணமி புண்யகாலத்தில் பூணூல் உபாகா்மா பண்டிகை வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல்லில் பிராமணா் சமூகத்திற்ச் சொந்தமான கோட்டை காா்னேஷன் சத்திரத்தில் நடைபெற்ற விழாவில், பிராமணா்கள் திரளாக பங்கேற்று பூணூல்களை அணிந்து உலக நன்மைக்காக பிராா்த்தனை செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை காா்னேஷசன் சத்திர அறக்கட்டளை கமிட்டி மற்றும் பிராமண சேவா சங்கத் தலைவா் வழக்குரைஞா் டி.வி.கிருஷ்ணமூா்த்தி மற்றும் துணைத் தலைவா் கே.ஆா்.கணேசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இதேபோல் மாவட்டம் முழுவதும் பூணூல் அணியும் இதர சமூகத்தினரும் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு கோயில்களில் பூணூல் மாற்றி சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT