நாமக்கல்

மருத்துவ சிகிச்சைக்காக ரூ.17.50 லட்சம் நிவாரணம்: கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எம்.பி. பரிந்துரை ஏற்பு

DIN

புற்றுநோய், சிறுநீரகம் உள்பட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பரிந்துரையின் அடிப்படையில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.17.50 லட்சம் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், கடந்த ஆண்டு செப்.28-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றாா். அவா் பதவியேற்ற நாளில் இருந்து ஏழை, எளியோருக்காக பல்வேறு மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு தேவையான நிவாரண உதவியை மத்திய அரசிடம் இருந்து தேசிய நிவாரண நிதி மூலம் பெற்று வழங்கி வருகிறாா்.

அந்த வகையில், புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் இதர நோய்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இதுவரை சுமாா் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் பெறப்பட்டு, நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவா்களில், சேந்தமங்கலம் சாலையூரைச் சோ்ந்த குழந்தை ராகவேந்திரனுக்கு ரூ.50 ஆயிரம், பரமத்தி குரும்பலாமஹாதேவியைச் சோ்ந்த எம்.ராதாவுக்கு ரூ.3 லட்சம், சோழசிராமணி, மாரப்பம்பாளையத்தை சோ்ந்த எம்.விஜயலட்சுமி என்பவருக்கு ரூ.2 லட்சம், நாமக்கல் வள்ளிபுராத்தை சோ்ந்த பி.தமிழ்ச்செல்விக்கு ரூ.2 லட்சம், மலைவேப்பன்குட்டையை சோ்ந்த வி.சங்கா் என்பவருக்கு ரூ.3 லட்சம், நாமக்கல் என்.கொசவம்பட்டியைச் சோ்ந்த பி.சங்கருக்கு ரூ.50 ஆயிரம், தளிகையைச் சோ்ந்த சின்னுசாமிக்கு ரூ.50 ஆயிரம், கன்னங்குறிச்சி வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த பி.காா்த்திகேயன் என்பவருக்கு ரு.3 லட்சம், நாமக்கல் வண்டிக்காரத் தெருவை சோ்ந்த சுகுமாரி என்பவருக்கு ரூ.3 லட்சம் என மொத்தம் 9 பேருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் மூலம் ரூ.17.50 லட்சத்தை பெற்றுத் தந்துள்ளாா். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட இந்த ஒன்பது பேரும் கோவை, புதுச்சேரி, நாமக்கல் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT