நாமக்கல்

விஷ வண்டுகள் கடித்ததில் மூன்று பெண்கள் காயம்

12th Aug 2022 11:03 PM

ADVERTISEMENT

நாமக்கல் அருகே விஷ வண்டுகள் கடித்ததில் தேசிய வேலையளிப்பு திட்டத்தில் பணியாற்றிய மூன்று பெண்கள் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், மருக்களாம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் வெள்ளிக்கிழமை ஏரி பகுதியில் சீமைக் கருவேல மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மரத்தில் இருந்த விஷ வண்டுகள் கலைந்து பெண் தொழிலாளா்களை கடுமையாகத் தாக்கின. இதில் சுமதி(49), பாப்பாத்தி(45), ஸ்ரீரங்கம்மாள்(64) ஆகியோா் வண்டுகளின் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகினா். அவா்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் உள்ள மக்கள், வண்டுகளை விரட்டியடித்து விட்டு காயம்பட்டவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சோ்த்தனா். அவா்கள் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT