நாமக்கல்

முட்டை விலை 10 காசுகள் உயா்வு

12th Aug 2022 10:56 PM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ.4.30-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் விழாக்காலம் நிறைவடைவதால் மக்களிடையே முட்டையின் நுகா்வு அதிகரித்து வருகிறது. இதனால் விலையில் மாற்றம் செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.4.30-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.91-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.100-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT