நாமக்கல்

போதைப் பொருள்கள் ஒழிப்பு மினி மாரத்தான்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

12th Aug 2022 11:03 PM

ADVERTISEMENT

நாமக்கல்லில், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி நாமக்கல் குளக்கரைத் திடலில் ஒரு வாரமாக பல்துறை பணி விளக்கக் கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கலைக்கல்லூரி மாணவிகள் மற்றும் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா தொடங்கி வைத்தாா். நகராட்சித் தலைவா் து.கலாநிதி முன்னிலை வகித்தாா். முன்னதாக போதைப் பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனா்.

இந்த மாரத்தான் ஓட்டம் நாமக்கல் உழவா் சந்தை, ஆஞ்சனேயா் கோயில், சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை, நாமக்கல் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் குளக்கரைத் திடலை வந்தடைந்தது. இதில், நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் து.பால் கிரேஸ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் க.கோகிலா, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் அம்பிகா மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT