நாமக்கல்

தேவாலயங்களைப் பழுது பாா்க்க அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

11th Aug 2022 12:45 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுது பாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசு நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுது பாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-2017 ஆம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள், தேவாலய கட்டடத்தின் ஆண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10- 15 ஆண்டுகள் இருப்பின் ரூ. ஒரு லட்சமும், 15, -20 ஆண்டுக்குள் இருப்பின் ரூ. 2 லட்சமும், 20 ஆண்டுக்கு மேற்பட்ட தேவாலயத்திற்கு ரூ. 3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். ஆட்சியா் தலைமையிலான குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் சிறுபான்மையினா் நல இயக்குநருக்கு அனுப்பி நிதியுதவி கோரி பரிந்துரை செய்யும்.

ADVERTISEMENT

இந்த நிதியுவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-

 

ADVERTISEMENT
ADVERTISEMENT