நாமக்கல்

400 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கல்

11th Aug 2022 12:42 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்லில், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்த பொதுமக்கள் 400 பேருக்கு மருத்துவக் காப்பீடு அட்டைகளை பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி புதன்கிழமை வழங்கினாா்.

நாமக்கல்-மோகனூா் சாலை கொண்டிச்செட்டிபட்டியில் உள்ள பாஜக மக்கள் சேவை மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவா் கே.பி.சரவணன் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் யுவராஜ் வரவேற்றாா். இதில், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள், வாா்டு மக்களுக்கு 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவா்ண தேசியக்கொடிகளை பாஜக மாநிலத் துணைத் தலைவரும், நாமக்கல் மாவட்ட பாா்வையாளருமான வி.பி.துரைசாமி 400 பேருக்கு வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன் மற்றும் மாவட்ட, நகர, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT