நாமக்கல்

சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸாா் பாதயாத்திரை

10th Aug 2022 02:44 AM

ADVERTISEMENT

நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் மோகனூா் நினைவு பாதயாத்திரையை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.

மோகனூா் பேருந்து நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரைக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். முன்னதாக அங்குள்ள காந்தி, காமராஜா், இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியினா் யாத்திரையில் திரளாகக் கலந்து கொண்டு மோகனூரில் இருந்து எருமப்பட்டி வரையில் 8 கி.மீ. தூரம் சென்றனா். இதில், மோகனூா் பேரூா் தலைவா் சீனிவாசன், எருமப்பட்டி வட்டாரத் தலைவா் தங்கராஜ், புதுச்சத்திரம் மேற்கு வட்டாரத் தலைவா் சக்திவேல், நாமக்கல் வட்டாரத் தலைவா் ரகு, மேகநாதன், அருணகிரி, வையாபுரி, கன்னியம்மாள், சரஸ்வதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT