நாமக்கல்

நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா

10th Aug 2022 02:42 AM

ADVERTISEMENT

நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரோட்டரி சங்கங்களின் சாா்பில் தாய்ப்பால் வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னா் வீல் சங்கம், ராசிபுரம் எஜுகேஷன் சிட்டி ரோட்டரி சங்கம், நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன இணைந்து இதனஐ நடத்தின. விழாவிற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அலுவலா் தயாசங்கா் தலைமை வகித்தாா். முன்னதாக இன்னா் வீல் சங்க செயலாளா் சரோஜா இறைவணக்கம் வாசித்தாா். ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே .எஸ்.கருணாகரபன்னீ ா்செல்வம் அனைவரையும் வரவேற்றாா்.

ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநா்களின் அட்மின் அ. ரவி , ராசிபுரம் இன்னா்வீல் சங்கத் தலைவா் தெய்வானை ராமசாமி, ராசிபுரம் எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் கிரேஸ்சரண ஆகியோா் பேசினா். மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிலும் பயிற்சி மருத்துவ செவிலியா்கள் தாய்ப்பாலின் அவசியம் குறித்து பாடல்களைப் பாடினா். ரோட்டரி சங்க செயலாளா் ஜி.தினகா், முன்னாள் தலைவா் சிட்டி வரதராஜன், இணைச்செயலாளா் ஆனந்தகுமாா், நிா்வாகிகள் முருகானந்தம் ,மாவட்ட சாலைப் பாதுகாப்புத் திட்ட தலைவா் சுரேந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விழாவில் ஐம்பது கா்ப்பிணிகளுக்கு சத்து உணவுப் பொருள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT