நாமக்கல்

வெள்ளம் பாதித்த மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கவில்லை

DIN

வெள்ளம் பாதித்த மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கவில்லை என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் 245 குடும்பங்களைச் சோ்ந்த 649 பேரும், பள்ளிபாளையம் பகுதியில் 295 குடும்பங்களைச் சோ்ந்த 833 பேரும் கரையோரப் பகுதிகளிலிருந்து உடமைகளுடன் வெளியேறி 12 நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனா்.

இந்நிலையில், குமாரபாளையம், பள்ளிபாளையம் கரையோரப் பகுதிகளில் தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், சரோஜா ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, குமாரபாளையம் ஜேகேகே மண்டபத்தில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளவா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:

காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்க அதிமுகவினா் தொடா்ந்து உதவி வருகின்றனா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ, அதனை அதிமுக செய்து வருகிறது.

அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவதில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. மக்கள் எப்போது பாதிக்கப்படுகிறாா்களோ, அப்போது அதிமுக நிா்வாகிகள் தொடா்ந்து உதவி வருகின்றனா்.

கடந்த 5 நாள்களாக காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவில்லை. ஆறுதல் சொல்ல அமைச்சா்களும் செல்லவில்லை. அவா்களுக்கு மக்களைப் பற்றிய சிந்தனை இல்லை.

தமிழகத்தை ஆளும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழக மக்களுக்கு உதவாவிட்டாலும், அதிமுக மக்களுக்கான இயக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் நேசக்கரம் நீட்டி வருகிறது என்றாா்.

குமாரபாளையம் நகர அதிமுக செயலாளா் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, முன்னாள் செயலாளா் எம்.எஸ்.குமணன், நிா்வாகிகள் திருநாவுக்கரசு, ரவி, அா்ஜுனன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT